தமிழ்நாடு

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான்

ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான்

webteam

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் பதப்படுத்தப்பட்டது உண்மைதான் என்று மருத்துவர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே மற்றும் அப்போலோ மருத்துவர் குழு இன்று விளக்கமளித்தது. அப்போது பேசிய மருத்துவர் சுதா சேஷய்யன், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் டிசம்பர் 6ம் தேதி அதிகாலை 12.20 மணிக்கு எம்பாமிங் எனும் முறையில் பதப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இந்த நடைமுறை 15 நிமிடங்களில் முடிந்ததாகத் தெரிவித்த மருத்துவர் சுதா, பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்படும் என்பதால் பதப்படுத்தப்பட்டதாகவும் விளக்கமளித்தார். பிரபலங்கள் இறக்கும்போது உடல் பதப்படுத்தப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் மறைந்தபோதும் அவரது உடல் பதப்பட்டது என்றும் மருத்துவர் சுதா சேஷய்யன் தெரிவித்தார்.