தமிழ்நாடு

வேண்டாம் என்றார் ஜெயலலிதா: நீதிமன்றத்தில் அப்போலோ பதில் மனு

வேண்டாம் என்றார் ஜெயலலிதா: நீதிமன்றத்தில் அப்போலோ பதில் மனு

webteam

மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது புகைப்படங்கள் வெளியிட வேண்டாம் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாக அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதுகுறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறி அரும்பாக்கத்தைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் பி.ஏ.ஜோசப் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று ஜெயலலிதா கேட்டுக்கொண்டதாகவும், அதனால் பிசிஏ விதிமுறைப்படி நோயாளி குறித்த விவரங்களை வெளியிடவில்லை என்று அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதையே அப்போலோ மருத்துவமனையும் கூறியிருப்பதாக மனுதாரர் ஜோசப் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தது.