மதுரை அலங்கநல்லூரில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. பாலமேடு, அவனியாபுரத்திலும் நாளை ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், இதற்கான அவசர சட்டத்தினை ஆளுநர் வித்தியாசாகர் ராவ் பிறப்பித்து உத்தரவிட்டார். இதன்மூலம் ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியது. இந்தநிலையில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று இரவு 8.45 மணிக்கு மதுரை செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் அலங்காநல்லூர், அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.