தமிழ்நாடு

கழிவறைத் தொட்டியில் விழுந்த ஜல்லிக்கட்டுக் காளை

கழிவறைத் தொட்டியில் விழுந்த ஜல்லிக்கட்டுக் காளை

webteam

பாலமேட்டில் கழிவறைத் தொட்டியில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஏராளமானோர் பாலமேடு வந்து ஜல்லிக்கட்டை உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

இதற்கிடையே பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்வதற்காக பதிவு செய்யப்பட்ட சிக்கந்தர் சாவடி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரது காளை வாடிவாசலுக்கு செல்ல வரிசையில் நின்று கொண்டிருந்தது. 

அப்போது திடீரென மிரண்டு ஓடிய அந்தக் காளை, அருகாமையில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பயன்பாட்டில்லாத கழிவறைத் தொட்டியில் தவறி விழுந்தது. இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரமாகப் போராடி, பின்னர் கயிறுகட்டி தொட்டிக்குள் கிடந்த ஜல்லிக்கட்டு காளையை பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதி சற்று பரபரப்பானது