தமிழ்நாடு

புதுக்கோட்டையில் 14ம் தேதி ஜல்லிக்கட்டு !

புதுக்கோட்டையில் 14ம் தேதி ஜல்லிக்கட்டு !

webteam

புதுக்கோட்டையில் அரசு அனுமதி கிடைக்காததால் ஒத்தி வைக்கப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டி வருகின்றி 14ம் தேதி நடத்த அரசானை பிறபிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சியில், புத்தாண்டை முன்னிட்டு கடந்த 2ம் தேதி ஜல்லக்கட்டு போட்டி நடத்த திட்டமிடபட்டிருந்தது. இதற்கான வாடிவாசல் அமைக்கும் பணி, தடுப்பு வேலிகள், பார்வையாளர் மேடை உள்ளிட்ட முன்னேற்பாடுகள் பணிகளை செய்து, 800 காளைகள் மற்றும் 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி சீட்டும் வழங்கி இருந்தனர்.

ஆனால் தமிழக அரசு அங்கு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அரசானை பிறப்பிக்காததால் தச்சங்குறிச்சியில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது.இதனால் ஏமாற்றமடைந்த அக்கிராம மக்கள் அன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.


இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தச்சங்குறிச்சி உள்ளிட்ட 4 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற 14ம் தேதி போகி பண்டிகை அன்று தச்சங்குறிச்சியிலும், 18 ம் தேதி வடமாலாப்பூரிலும், 19 ம் தேதி கீழப்பனையூரிலும், 20 ம் தேதி விராலிமலையும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அரசு அனுமதியளித்துள்ளது. அரசின் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைற்துள்ள தச்சங்குறிச்சி கிராம மக்கள் 14 ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.