தமிழ்நாடு

தேவாலயத்தில் கறுப்புக் கொடி

தேவாலயத்தில் கறுப்புக் கொடி

webteam

ஜல்லிக்கட்டுக்காக போராடும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஆதரவாகவும், ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டியும் மதுரை ஞான ஒளிபுரத்தில் உள்ள சர்ச்சில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை ஞான ஒளிபுரத்தில் உள்ள புனித தூய வளனார் தேவாலயத்தில், தமிழகத்தின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி பங்கு இறைமக்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 300 க்கும் மேற்பட்டோர் கறுப்புக் கொடி ஏற்றினர்.

இதையடுத்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தும் வகையிலும், பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டியும் கோஷங்களை எழுப்பினர். அப்போது அவர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை இந்தியாவில் தடை செய்ய வலியுறுத்தும் வகையில் அவற்றை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.