தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணை தொடக்கம்

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணை தொடக்கம்

webteam

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பான விசாரணையை சென்னை மெரினாவில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தொடங்கினார்.

ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் இறுதியில் வன்முறை சம்பவங்கள் நடந்தது. இந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைத்தது. இந்த விசாரணைக் குழுவானது, போராட்ட வன்முறை தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதங்களில் அறிக்கையைத் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், மெரினா கடற்கரையில் போராட்டம் தொடங்கிய விவேகானந்தர் இல்லம் அமைந்துள்ள பகுதியில் நீதிபதி ராஜேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். மேலும், போராட்ட வன்முறை தொடர்பாக காவல்துறை அதிகாரிகளிடமும் அவர் விசாரணை மேற்கொண்டார். அதன்பின்னர், வன்முறையால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதிக்குச் சென்ற நீதிபதி ராஜேஸ்வரன், மீன்சந்தையில் நடந்த நிகழ்வுகள் குறித்து மீனவர்களிடம் விசாரணை நடத்தினார்.