தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு விவகாரம்: பிரதமரை சந்திக்க அதிமுக எம்.பிக்கள் திட்டம்

ஜல்லிக்கட்டு விவகாரம்: பிரதமரை சந்திக்க அதிமுக எம்.பிக்கள் திட்டம்

webteam

பொங்கல் பண்டிகை நெருங்கிவரும் நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரிடம் நேரில் முறையிட அதிமுக எம்.பி.க்‌கள் திட்டமிட்டுள்ளனர்.

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கோரி கடிதம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்ககோரி அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றன. இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பிரதமரை நேரில் சந்தித்து முறையிட அதிமுக எம்.பிக்கள் திட்டமிட்டுள்ளனர்.