தமிழ்நாடு

உலகம்பட்டியில் 8 ஆண்டுகளுக்கு பின் சீறிப்பாய்ந்த காளைகள்..!

உலகம்பட்டியில் 8 ஆண்டுகளுக்கு பின் சீறிப்பாய்ந்த காளைகள்..!

Rasus

திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. சீறிப்பாய்ந்து வரும் காளைகளை அடக்கும் முயற்சியில் மாடுபிடி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகம்பட்டி கிராமத்தில் உள்ள புனித பெரிய அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஊர்மக்கள் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதால் மாடுபிடி வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். போட்டியில் முதன்முதலாக வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு காளையும் வரிசையாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 400 காளைகள் உள்ளன. இதனை பிடிப்பதற்காக 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் உள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதையொட்டி தேவையான ஏற்பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.