திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கருங்குளம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் மாடுபடி வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த 2014-ல் உச்சநீதிமன்றம் தடை விதித்தது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடைபெற்ற தன்னெழுச்சி போராட்டம் காரணமாக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கியது.
இதனையடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு விளையாட்டு கோலாகலமாக நடைபெற்றது. அப்போது சீறிப் பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் அடக்க முயற்சித்தனர். ஆனால் ஒரு சில காளைகள் எதற்கும் அடங்காமல், வெற்றி வாகை சூடி உரிமையாளர்களுக்கு பரிசை பெற்றுத் தந்தது. அதனைப்போல, ஒரு சில காளைளை வீரர்கள் அடக்கி, பரிசுகளை வென்றனர்.
தடை நீங்கியதற்கு பின், நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்தனர்.