திருச்சியில் தடையை மீறி 6 ஆவது நாளாக ஜல்லிக்கட்டு நடத்தி மக்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்திருக்கும் சூழலில், திருச்சி மணப்பாறையில் 6 ஆவது நாளாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
மணப்பாறையை அடுத்துள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்துவதை உள்ளூர் மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். தடை உள்ள போதிலும் கடந்த 5 நாட்களாக பல்வேறு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, பெரிய அணைக்கரைப்பட்டியில் தடையையும் மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. 40 க்கும் மேற்பட்ட காளைகளை உரிமையாளர்கள் அவிழ்த்துவிட அவற்றை இளைஞர்கள் பிடிக்க முயன்றனர்.