ஜல்லிக்கட்டு போட்டியை “மதுரை காவலன்” எனும் செயலி மூலம் நேரலையாக காணும் வசதியை மதுரை மாவட்ட காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.
மதுரை மாவட்ட மக்களின் நலனுக்காக “மதுரை காவலன்” எனும் செயலி கடந்த 2017 டிசம்பரில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதில் ஜல்லிக்கட்டு நேரடி ஒளிபரப்பு எனும் புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை ஆண்ட்ராய்டு செல்போனில் பதிவிறக்கம் செய்து ஜல்லிக்கட்டு போட்டியை நேரலையாக காணலாம்.
அதோடு இந்த செயலியில், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம், அவசர உதவி எண்கள், அவசர மருத்துவ உதவி மையங்கள் போன்றவற்றின் தகவல்களும் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை காண விரும்புபவர்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே பயன்படுத்துவோர் அதனை மேம்படுத்தினால் இந்த வசதியைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “MADURAI KAVALAN” Madurai District Police Youtube LIVE மற்றும் Facebook LIVE போன்றவற்றில் நேரடியாக பார்க்கும் வசதியும் செய்துதரப்பட்டுள்ளது.