தமிழ்நாடு

300 இடங்களில் ஜல்லிகட்டு நடத்திய புதுக்கோட்டை மாவட்டம்!

webteam

தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிக அளவிலான வாடிவாசல்கள் உள்ளன. ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளதால், தென்னலூர், நார்த்தாமலை, கோவில்பட்டி, வேந்தன்பட்டி, ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் 10 நாட்களில் போட்டிகளை நடத்தி முடிக்க அந்தந்த பகுதி கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக வாடிவாசல்களை தயார்படுத்தும் பணிகள் நடந்துவருகின்றன.

பத்து ஆண்டுகளுக்கும் முன்பு வரையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 300 இடங்களில் ஜல்லிகட்டு போட்டிகள் நடந்துள்ளன. 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை 196 இடங்களில் ஜல்லிகட்டு போட்டிகள் நடத்த மாவட்டம் நிர்வாகம் அனுமதி வழங்கியது. கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்க‌ட்டு போட்டிகள் நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியுள்ளதால் வாடிவாசல்களை சீரமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இதனால் பழைய ஜல்லிக்கட்டு நினைவுகளின் உற்சாகத்துடன் இளைஞர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.

தடுப்புகள் அமைக்கப்ப‌ட்டு ஜல்லிக்கட்டு நடத்துவதைவிட தங்களின் பாரம்பரிய முறைப்படி, திறந்த மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை புதுக்கோட்டை மக்கள் முன்வைக்கிறார்கள்.