மதுரை முகநூல்
தமிழ்நாடு

புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி!

மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில், ‘கல்விக்கூடங்களில் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு விளங்கும் விழா நடைப்பெற்றது.

ஜெனிட்டா ரோஸ்லின்

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக 10 மசோத்தாக்களுக்கு ஒப்புதல் அழிக்காமல் வைத்திருந்ததால், சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தால் கடுமையாக சாடப்பட்டவர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவரும் இவர், மசோதா சர்ச்சைக்கு பிறகு சிறிது காலம் அமைதி காப்பார் என்று நினைத்தால்.. அடுத்த சர்ச்சை சிக்கி பலரின் கண்டனத்தையும் பெற்று வருகிறார்.

மதுரையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில், ‘கல்விக்கூடங்களில் கம்பர்’ என்ற தலைப்பில் மாநில அளவில் நடைப்பெற்ற பேச்சுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசு விளங்கும் விழா நடைப்பெற்றது.

இதில், கல்லூரித் தலைவர் ஹரி தியாகராஜன், எம்ஜிஆர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுதா சேஷய்யன், விஐடி பல்கலைக்கழக இணைவேந்தர் செல்வம், சாஸ்த்ரா பல்கலைக்கழக துணைவேந்தர் வைத்ய் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "கம்பராமாயணம் தமிழர்களின அடையாளம், தமிழ் இலக்கிய பண்பாட்டின் பிரதிபலிப்பு. ஒரு மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் காவியம். பெண்களை எப்படி கண்ணியமாக போற்றப்பட வேண்டும் என கம்பன் கூறியதை பார்த்தோம்..” என்று பல கருத்துகளை பதிவிட்டார்.

தொடர்ந்து உரையின் முடிவில், " இந்த நல்லநாளில் ஸ்ரீ ராமருக்கு அஞ்சலி செலுத்துவோம். நான் சொல்கிறேன். நீங்கள் திரும்பி சொல்லுங்கள் , ஜெய் ஸ்ரீ ராம் " என்று முழக்கமிட்டவர், மாணவர்களையும் ஜெய் ஸ்ரீ ராம் என்று முழக்கமிட வைத்த்தார்.

சாதி , மதங்களை புறம் தள்ளி, அனைவரும் பொது என்ற கருத்தை முன்வைக்கும் கல்வி நிறுவனத்தில், ஆளுநர் ரவி மாணவர்களை ’ஜெய் ஸ்ரீராம் ‘ என கோஷமிட வைத்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள சசிகாந்த் செந்தில் , "உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டு, மாநில அரசால் தடுக்கப்பட்ட பிறகு, இப்போது மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட வைத்து அமைப்பை எரிச்சலடைய வைத்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் அதிர்ப்தி அடைந்த அவர், ‘ நீதிமன்றங்கள் எனக்கு எதிராகத் தீர்ப்பளித்தாலும், எனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல வேறு வழிகளைக் கண்டுபிடிப்பேன்’ என்று மறைமுகமாக கூறியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மனோ தங்கராஜ், ” இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தினை கால் தூசு அளவிற்கு கூட ஆளுநர் மதிக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்-ன் Bunch of Thoughts எனும் நஞ்சை மனதில் சுமந்து நடக்கும் ஆளுநர் எப்படி அரசியல் சட்டத்தை மதிப்பார்?

பல மத நம்பிக்கைகள் உடைய கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களிடம் ஒரு குறிப்பிட்ட மதத்தை திணிக்கும் நோக்கில் தனது அதிகாரத்தை தவறாகக் கையாண்டிருக்கிறார். இப்பேர்பட்ட நஞ்சை சுமக்கும் நாகரீகமற்றவர்கள் எப்படி நடுநிலையுடன் மக்களுக்கு சேவை ஆற்ற முடியும். உச்சநீதிமன்ற தீர்ப்பால் விரக்தியில் இருக்கம் ஆளுநரே திரும்ப போ” என்று பதிவிட்டுள்ளார்.