ஜெகதீச பாண்டியன் - சீமான் புதிய தலைமுறை
தமிழ்நாடு

“சங்கியாக செயல்பட முடியாது என்ற காரணத்தால்..”- நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய ஜெகதீச பாண்டியன்

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் விலகி உள்ளார்.

ஜெ.நிவேதா

நாம் தமிழர் கட்சியில் எந்த ஜனநாயகமும் இல்லை எனக் கூறி ஜெகதீச பாண்டியன் விலகினார். 2024 மக்களவைத் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் நாதக சார்பில் போட்டியிட்டார் ஜெகதீச பாண்டியன். நாதகவில் மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்த அவர், இன்று ஐந்து பக்க அறிக்கையொன்றை வெளியிட்டு கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். இது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகதீச பாண்டியன்

தன் அறிக்கையில் அவர், நாதக-வில் சீமானின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக, “மாவீரர் குடும்பத்திற்கே மரியாதை கொடுக்காத நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள்? வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள் அண்ணா. ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை வலதுசாரி சிந்தனையோடு உங்களால் கொண்டுவர முடியவே முடியாது.

இனிமேல் என்னால் வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும். தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது. சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால் நான் உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய, வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு, விலகுகிறேன் அண்ணா!” என்றுள்ளார்.