ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒரு பிரிவினர் மட்டும் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்குகின்றனர்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். அதையொட்டி, ஜாக்டோ ஜியோவில் மொத்தம் உள்ள 23 சங்கங்களில், பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கங்கள், காவலர் அமைச்சுப் பணியாளர் சங்கத்தினர் உள்பட 17 சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ளனர். ஆனால் பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக்
குழுவின் அடிப்படையில் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மீதமுள்ள 6 சங்கத்தினர் மட்டும் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.