தமிழ்நாடு

ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா மனு

webteam

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசுமடையாக்கப்பட்டது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிகளாக அவரது அண்ணம் பிள்ளைகளான ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக்கை உயர்நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையிலும், வேதா இல்லம் அரசுடையாக்கபப்டது.

இந்நிலையில் வேதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டதை எதிர்த்து ஜெ.தீபா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கீழமை நீதிமன்றத்தில் அரசு செலுத்தியுள்ள தொகையில் வருமான வரித்துறை நிலுவையை வசூலிக்கவும் தடை விதிக்க கோரிக்கை விடுத்துள்ளார். வேதா இல்லத்தில் உள்ள அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய அரசுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சட்டபூர்வமான வாரிசு என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதால் தன்னையும், ஜெ.தீபக்கையும் கேட்காமல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என மனு குறிப்பிட்டுள்ளார்.