தமிழ்நாடு

கொரோனா குறித்த சந்தேகங்களை இனி போனிலே கேட்கலாம்.... தொடர்பு எண் உள்ளே..!

webteam

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, ஐவிஆர்எஸ் சேவையை முதல்வர் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் இந்த சூழ்நிலையில், கொரோனா பரவாமல் இருக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதியோடு  முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கொரோனா தொடர்பாக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து பேசினார். குறிப்பாக 10-ஆம் வகுப்பு மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என்றும் நோயின் தீவிரத்தை பொருத்து ஊரடங்கு குறித்த அறிவிப்புகள் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.


இதனைத்தொடர்ந்து தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக, ஐவிஆர்எஸ் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு, இந்த குரல்வழி சேவை மூலம் விளக்கம் பெறலாம். இதற்காக தனித்த தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 94999 - 12345 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் , தமிழ்நாடு கொரோனா தொற்று கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு அமைப்பில் அழைப்பு பதிவாகிடும்.


ஒருவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருக்கிறதா ? இல்லையா? என்பது போன்ற விளக்கங்களை இந்த சேவை மூலம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். தொடக்க விழாவில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.