ஈரோட்டில் கல்வி நிறுவனத்திற்குட்பட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5கோடி கைப்பற்றப்பட்டது
சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் உள்ள 22 உடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஈரோட்டில் கல்வி நிறுவனத்திற்குட்பட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5கோடி கைப்பற்றப்பட்டது. ஈரோடு மற்றும் பெருந்துறையில் நந்தா கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் நந்தா பாலிடெக்னிக், நந்தா இன்ஜினியரிங் , நந்தா டெக்னாலஜி, நந்தா ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்காலேஜ் , நந்தா டீச்சர் ட்ரைனிங் , நந்தா சிபிஎஸ்இ என 21 கல்வி
நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது .
இந்த நிறுவனத்தின்உரிமையாளரான சண்முகம் ஈரோட்டில் குடியிருந்து வரும் நிலையில் அவரது வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் இன்று வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வருமான வரித்துறை சோதனையில் சென்னை , கோவை ,ஈரோடு,சேலத்தைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 15 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5கோடி கைப்பற்றப்பட்டது
நாமக்கல்லில் அரசு கட்டுமான பணி ஒப்பந்ததாரர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை செய்தனர். சத்தியமூர்த்தி & கோ என்ற பெயரில் இயங்கும் கட்டுமான நிறுவனம், அரசின் சார்பில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, மேம்பாலங்கள், அரசு பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகள் கட்டும் பணிகளை பல கோடி மதிப்பில் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
இத்துடன் நட்சத்திர விடுதி, கோழிப்பண்ணை, சொகுசு கார் விற்பனை ஷோரும் உள்ளிட்ட பல்வேறு தொழில்களும் செய்து வருகின்றனர். இந்நிலையில் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து இன்று நாமக்கல் அழகு நகரில் உள்ள சத்தியமூர்த்தியின் பங்களா வீடு, கந்தசாமி நகரில் உள்ள கட்டுமான நிறுவன அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்