ஜெகத்ரட்சகன் வீட்டில் நடந்த சோதனை  pt web
தமிழ்நாடு

வருமான வரித்துறையினரின் சோதனையின்போதே புகுந்த அமலாக்கத்துறை.. சிக்கலில் எம்.பி ஜெகத்ரட்சகன்

ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 3-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்ற சூழலில் அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

PT WEB

ஜெகத்ரட்சகனின் அடையாறு இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோல், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பாலாஜி பல் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை, பாலாஜி மருத்துவமனை, திருநீர்மலை, லட்சுமிபுரத்தில் ஜெகத்ரட்சகனின் உறவினரான தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் வீடு, சேலையூர் பாரத் பல்கலைக்கழகம், வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் உள்ள தாகூர் கல்லூரியிலும் மூன்றாவது நாளாக சோதனை நடைபெற்றது.

இந்நிலையில் வருமான வரித்துறையினரின் சோதனையின்போதே அமலாக்கத்துறையினரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.