நமது எம்ஜிஆர் அலுவலகம், டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி வீடு உள்பட பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் இன்று அதிகாலை முதல் இருந்தே 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர ஜெயா டிவியின் தலைமை செயல் அதிகாரி விவேக் ஜெயராமன் வீடு, வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் அலுவலகம், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நமது எம்ஜிஆர் நிறுவனம், பெங்களூருவில் உள்ள டிடிவி தினகரன் ஆதரவாளரான புகழேந்தி வீட்டிலும் இந்த சோதனை நடைபெறுகிறது. மேலும் மன்னார்குடியிலுள்ள சசிகலாவின் சகோதரர் திவாகரன் வீடு உள்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மொத்தமாக 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை முடிவுக்கு பின்னரே, என்ன காரணத்திற்காக சோதனை நடைபெற்றது என்பது தெரியவரும்.