பிரதமர் பாதுகாப்புக்கென்று அமைக்கப்பட்டிருக்கும் தனி காவல்படை அதிகாரிகள்தான் பிரதமருக்கு பாதுகாப்பு அளித்து வருகிறார்கள். அவர்களுக்கு அது மட்டுமே பணியாக இருந்து வருகிறது என கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் பேசும்போது, "பஞ்சாப் சென்ற பிரதமருக்கு சில அசௌரியம் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக உயிருக்கு ஆபத்து என்று கூறுவது ஏற்புடையது அல்ல. உலகிலுள்ள அனைத்து சர்வாதிகாரிகளும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று அவ்வப்போது பிரச்சாரம் செய்வது வாடிக்கையான ஒன்றுதான்" என்று கூறினார்.
மேலும், ஊரடங்கை உடனடியாக செயல்படுத்தாமல் படிப்படியாக செயல்படுத்துவது சரியான அணுகுமுறை. பொங்கலுக்கு நகர் புறங்களில் இருந்து. கிராமத்திற்கு வருபவர்களால் கொரானா பரவும் அபாயம் உள்ளது. அதனால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.