நாகையில் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் தூய்மை பணியாளர்கள் இல்லாததால் கழிவறையை தலைமையாசிரியரே தூய்மை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
நாகையை அடுத்துள்ள பாலையூர் ஒன்றியம் அழிஞ்சமங்கலம் பகுதியில் நூற்றாண்டுகள் கடந்த ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளியில் சுகாதார பணியாளர்கள் இல்லாத காரணத்தால் அப்பள்ளியின் கழிவறையை தலைமையாசிரியரே தூய்மை செய்யும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்த பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருபவர் வீரப்பன். கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து தினமும் பள்ளியின் கழிவறையை தானே தூய்மை செய்து வருகிறார். தலைமையாசிரியர் தூய்மை செய்யும் காட்சிகளை செல்போனில் பதிவு செய்த அப்பள்ளியின் மாணவர்கள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் தூய்மை பணியாளர்கள் இல்லாததால் இதுபோன்ற அவலம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.