தமிழ்நாடு

தமிழ்நாடு பட்ஜெட் 2021-22: ஆண்டுதோறும் ஜூன் 3ல் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது

JustinDurai
1921-ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடு என பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
அதன் ஒருபகுதியாக, ''1921-ஆம் ஆண்டு முதலான சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும்; ஆண்டுதோறும் ஜூன் 3-ல் கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது, ரூ.10 லட்சம் வழங்கப்படும்; செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்டத்தின்கீழ் தமிழ்ப் படைப்புகள் மொழிபெயர்க்கப்படும்'' உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.