தமிழ்நாடு

ஐடி ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கினர்

ஐடி ஊழியர்களும் போராட்டத்தில் இறங்கினர்

webteam

சென்னையில் மென்பொருள் நிறுவன ஊழியர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கினர்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வலியுறுத்தி தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சமூக வலைதளங்கள் மூலம் ஒன்றிணைந்த லட்சக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என சென்னை மென்பொருள் ஊழியர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சென்னை பெருங்குடியில் ஆயிரக்கணக்கான மென்பொருள் நிறுவன ஊழியர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் கிண்டி ஒலிம்பியா டெக் பார்க், தரமணி, ராமாபுரம் டி.எல்.எஃப் ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.