தமிழ்நாடு

"மத்திய அரசின் லட்சத்தீவு நடவடிக்கைகளில் இஸ்லாமியர்களின் அச்சம் நியாயமானது” - கமல்ஹாசன்

"மத்திய அரசின் லட்சத்தீவு நடவடிக்கைகளில் இஸ்லாமியர்களின் அச்சம் நியாயமானது” - கமல்ஹாசன்

sharpana

”மத்திய அரசின் லட்சத்தீவு நடவடிக்கைகளில் இஸ்லாமியர்களின் அச்சம் நியாயமானது” என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பிரபு பட்டேல் லட்சத்தீவு நிர்வாகியாக பொறுப்பேற்ற நாள் முதலே அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.  புதிதாக இயற்றப்படும் மசோதாக்கள் மக்கள் விரோத சட்டங்களாக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதே இச்சூழலுக்கு காரணம்.

பாசா சட்டம் தம் உரிமைகளுக்கு போராடுகிறவர்களின் குரலை ஒடுக்கும் சட்டமாக இருக்கிறது. லட்சத்தீவு பகுதிகளிலுள்ள அங்கன்வாடியில் மற்றும் பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவுகளில் அசைவ உணவு இடம் பெறாது என்னும் அறிவுப்பு உள்நோக்கம் உடையது.

மாட்டிறைச்சி பயன்பாட்டிலும் அரசின் பயன்பாடு இருக்குமோ என்னும் இஸ்லாமியர்களின் அச்சம் நியாயமானது.  புதிய சட்ட விதிமுறைகள் லட்சத்தீவின் அழகையும்  சுற்றுச்சூழலையும் மக்களின் உரிமைகளையும் ஒருசேர அழிப்பதாக உள்ளது.  லட்சத்தீவு மக்களின்  நிம்மதியை சீர்குலைக்கும் செயல்பாடுகளை மத்திய அரசு உடனே நிறுத்தவேண்டும் அவர் நிறுத்தவேண்டும்” என்று கூறியிருக்கிறார்.