தமிழ்நாடு

ஈஷாவின் ‘காவேரிக் கூக்குரல்’ இயக்கம் - குவியும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு

ஈஷாவின் ‘காவேரிக் கூக்குரல்’ இயக்கம் - குவியும் சினிமா நட்சத்திரங்களின் ஆதரவு

webteam

காவேரி கூக்குரல் இயக்கத்துக்கு அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

காவேரி நதிக்கு புத்துயிரூட்டவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஆரம்பித்துள்ளார். இந்த இயக்கத்தின் மூலம் கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள காவேரி வடிநிலப் பகுதிகளில் விவசாய நிலங்களில் அடுத்த, 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இவ்வியக்கத்துக்கு பல்வேறு துறையினரிடம் இருந்து ஆதரவு பெருகி கொண்டே வருகிறது. பலரும் ஜக்கி வாசுதேவை நேரில் சந்தித்தும், சமூக வலைத்தளங்களில் காணொளிகள், புகைப்படங்களை வெளியிட்டும் ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா, தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, தமிழக அமைச்சர்கள் விஜயபாஸ்கர், காமராஜ், மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன், சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திருச்சி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.நேரு, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் ஆதரவு தெரித்துள்ளனர்.

விளையாட்டு துறையில் இருந்து இந்திய கிரிக்கெட் வீரர்களான அஸ்வின், கே.எல்.ராகுல், பெண்கள் கிரிக்கெட் அணியை சார்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மேத்யூ ஹைடன் உள்ளிட்டோரும் தங்களின் ஆதரவை வழங்கியுள்ளனர்.  சினிமா துறையில் இருந்து நடிகர்கள் பிரபு, சந்தானம், மணிரத்னம், ரேவதி, ராதிகா சரத்குமார், காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, திரிஷா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோரும் ஆதரவை வழங்கியுள்ளனர்.