தமிழ்நாடு

கொரோனா பேரிடர்: ஈஷா பராமரிக்கும் 18 மயானங்களில் 3 மாதங்களுக்கு இலவச தகனம்

கொரோனா பேரிடர்: ஈஷா பராமரிக்கும் 18 மயானங்களில் 3 மாதங்களுக்கு இலவச தகனம்

நிவேதா ஜெகராஜா

ஈஷா அறக்கட்டளையால் பராமரிக்கப்படும் 18 மயானங்களில் அடுத்த மூன்று மாதங்களுக்கு கொரோனாவால் இறப்பவர்களை இலவசமாக தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈஷா அறக்கட்டளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈஷா மயானங்கள், கோவிட் தொற்றால் காலமானவர்களுக்கு கட்டணமின்றி தகன சேவையை அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கும். இந்த உயிர்க் கொல்லி வைரஸுக்கு அன்பிற்குரியவர்களை பறிகொடுத்தோருக்கு ஆதரவாய் இருக்க விரும்புகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈஷா சார்பில் கோவையில் 12 மயானங்கள், சென்னையில் 4, நாமக்கல் மற்றும் நெய்வேலியில் தலா ஒன்று என மொத்தம் 18 மயானங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கட்டளை அமைப்பு தெரிவித்துள்ளது.