சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் pt web
தமிழ்நாடு

தவெக மாநாடு | விக்கிரவாண்டியில் நாளை மழைக்கு வாய்ப்பா? - சுயாதீன வானிலை ஆய்வாளர் கொடுத்த தகவல்

தவெக மாநில மாநாடு நடைபெறும் அன்று விக்கிரவாண்டியில் மழை பெய்யுமா என்பது குறித்தும் தீபாவளியன்று மழைக்கான வாய்ப்பு குறித்தும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

PT WEB

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட வி. சாலையில் நடைபெறவுள்ளது. இதற்காக 280 ஏக்கர் பரப்பளவில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாநாடு

இந்நிலையில், தவெக மாநில மாநாடு நடைபெறும் அன்று விக்கிரவாண்டியில் மழை பெய்யுமா என்பது குறித்தும் தீபாவளியன்று மழைக்கான வாய்ப்பு குறித்தும் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறுகையில், “வடக்கு ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிரப் புயலானது அரபிக் கடலில் இருந்து ஈரப்பதமான மேற்குக் காற்று தமிழகத்தின் ஊடாக ஈர்த்தது. இதன் காரணமாக அக்டோபர் 25 ஆம் தேதியில் மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், அக்டோபர் 24 ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும் பரவலான இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

இந்த சூழலில் தாழ்வு மண்டலம் தற்போது தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் முழுமையாக வலுவிழக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நாளை பகல் நேரத்தில் தெளிவான வானத்துடன் வெப்பமான சூழலும், இரவு அதிகாலை நேரத்தில் பனிப்பொழிவுடன் குளிர்ந்த வானிலையும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழைக்கான வாய்ப்பு இல்லை

அக்டோபர் 31 ஆம் தேதியைப் பொறுத்தவரை வளிமண்டலத்தில் காற்றின் போக்கில் வேக மாறுபாடு நிலவும். இதன்காரணமாக பருவமழை தீவிரமடைவதற்கான சூழலோ, இடி மின்னலுடன் மழை பொழிவதற்கோ வாய்ப்புகள் இல்லை” என தெரிவித்தார்.