“ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டதுதான் அதிமுகவின் சாதனையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
தூத்துக்குடி உள்ளாட்சி தேர்தலையொட்டி காணொலி வாயிலாக முதல்வர் இன்று பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசியவர், ““திமுக ஆட்சியில்தான் தூத்துக்குடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், திமுக தூத்துக்குடிக்கு எதுவும் செய்யவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் கொல்லப்பட்டதும், சாத்தான் குளத்தில் தந்தையும் மகனும் கொல்லப்பட்டதுதான் தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுக செய்த சாதனையா?” என்று முதல்வர் கேள்வியெழுப்பி பேசினார்.