சென்னையில் பிரதமர் மோடி, அதிபர் ஷி ஜின்பிங் உடன் விருந்தில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரது செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் நாளை மாமல்லபுரம் வருகின்றனர். இரு தலைவர்களும் பல்லவர் கால கலைச் சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட சிற்பங்களை பார்வையிட உள்ளனர். சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை இதற்கான பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, சென்னையில் பிரதமர் மோடி, அதிபர் ஷி ஜின்பிங் உடன் விருந்தில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் நேற்று முதல் தகவல்கள் பரவியது. இந்நிலையில், ரஜினிக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று அவரது செய்தி தொடர்பாளர் ரியாஸ் அகமது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The News that's been circulating on Media regarding #Superstar #Rajinikanth is false!