இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் மழை குறைவாக பதிவாகியுள்ளதால், வரலாற்றில் இல்லாத அளவிற்கு மோசமான நவம்பர் மாதமாக இம்மாதம் அமையக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், நவம்பர் மாதத்தின் மீதமுள்ள நாட்களில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.
நடப்பு நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெய்துள்ள குறைந்த அளவு மழையின் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான நவம்பர் மாதமாக இந்தாண்டு நவம்பர் அமையுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும், வரவிருக்கும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சுயாதீன வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதத்தின் இயல்பான மழை பொழிவு இதுவரை 181.7 மி.மீ ஆக இருந்துள்ளது.. ஆனால், இந்த 2025ஆம் ஆண்டு நவம்பரில் தற்போதுவரை 15.1 மி.மீ ஆகதான் மழை பொழிந்திருக்கிறது.. இருப்பினும் இது நவம்பர் 10 வரையிலான பெய்த மழையின் அளவு மட்டுமே என்பதால் இந்த மாதம் இறுதிக்குள் அதிகமான மழை பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதில் சமீபத்திய ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் மிகக்குறைவாக பொழிந்த மழையின அளவு என்பது 125.8 மி.மீ என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நவம்பர் 10, 2025ஆம் தேதி வரை 15.1 மி.மீ மட்டுமே மழை பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த மழையைப் பெறும் நவம்பர் மாதமாக இது அமையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் இது குறித்து கூறுகையில், "நவம்பர் மாதத்தின் மீதமுள்ள நாட்களில் மழைக்கான வாய்ப்புகள் உள்ளன. இதில் நவம்பர் 11 முதல் 13ஆம் தேதி வரை சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதில் தென் தமிழகம் மீண்டும் அதிக மழை பொழிவைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதில் தீவிர மழை பொழிவு நவம்பர் 17 முதல் 20ஆம் தேதி வரையிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் 24 முதல் 26ஆம் தேதி வரையிலும் (±1 நாள்), தமிழகத்தில் மழை மீண்டும் தீவிரமடையும். குறிப்பாக, நவம்பர் 17 முதல் 20 தேதிகள் வரையிலான காலகட்டம் நல்ல மழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் வரவிருக்கும் மழைப் பொழிவுகளால் இந்த ஆண்டு நவம்பர் மாத மழை அளவை எவ்வளவு உயர்த்த முடியும் என்பதேயாகும்..
எதிர்பார்க்கப்படும் மழைப் பொழிவுகள் மூலம், சமீபத்திய ஆண்டுகளில் நவம்பரில் பதிவான மிகக் குறைந்த அளவான 125 மி.மீ மழையையாவது எட்ட முடியுமா? அந்த இலக்கை எட்டினால், அது பெரிய பற்றாக்குறையுடன் அமையவிருக்கும் இந்த மாதத்துக்கு ஒரு ஆறுதலாக இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார்.
வரலாற்று ரீதியாக, நவம்பர் மாதம் அதிக மழை பெறும்போதெல்லாம், ஒட்டுமொத்த வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் தோல்வியடைவதில்லை என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்..