தமிழ்நாடு

ஓபிஎஸ், ஈபிஎஸ் 2-ஆம் கட்ட ஆலோசனை: எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்?

ஓபிஎஸ், ஈபிஎஸ் 2-ஆம் கட்ட ஆலோசனை: எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்?

webteam

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் 2-ஆம் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்திருந்தார். இதையடுத்து அதிமுகவில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

அதிமுக செயற்குழு கூட்டத்தின் போதும் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடையே நேரடியாக வாக்குவாதம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் ஓபிஎஸ்சிடமும் ஈபிஎஸ்சிடமும் தனித்தனியாக ஆலோசனைகள் மேற்கொண்டனர். இந்நிலையில், தற்போது துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கே.பி முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோரிடம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றார். அதேபோல், பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள் கே.பி அன்பழகன், சிவி சண்முகம், காமராஜ், நத்தம் விஸ்வநாதனுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்படுவார் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.