தமிழ்நாடு

மின்வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாடம் படிக்கும் இருளர் இன குழந்தைகள்

நிவேதா ஜெகராஜா

ராணிப்பேட்டையில் இருளர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வீட்டில் வைக்கப்படும் சிறு சிறு விளக்குகளை வைத்தும், மெழுகுவர்த்தி வைத்தும் படிக்கும் சூழ்நிலையால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். விரைவில் தங்களுக்கு மின் வசதி சேவையை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம், அத்தியானம் கிராமத்தைதில் 20 கும் மேற்பட்ட இருளர் இன சமூகத்தை சேர்ந்த குடும்பங்களில், 60 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக தங்களுக்கு மின் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி உள்ளதாக இம்மக்கள் கூறுகின்றனர்.

இதைக்குறிப்பிட்டு தங்கள் வசிக்கும் பகுதி மக்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கடந்த 5 ஆண்டுகளாக மாவட்ட முறையிட்டு வருவதாகவும, இருளான பகுதியில் குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் வசித்து வருகிறார்கள்.

பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் இருளில் மெழுகுவர்த்தி, விளக்கு வெளிச்சத்தில் படித்து வருவதால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இது தொடர்பாக பலமுறை அரசுக்கு கோரிக்கை விடுத்தோம் மின் வசதி ஏற்படுத்த அதிகாரிகள் முன்வர வில்லை.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து தங்களுக்கு மின் வசதி ஏற்படுத்திதர வேண்டும் என அரசுக்கு இருளர் இன சமூக மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.