எக்ஸ் வலைதளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், இந்தியாவின் செழுமையான பாரம்பரியம், ஒட்டுமொத்த உலகத்திற்கும் உத்வேகம் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் சமீபத்திய தொல்பொருள் கண்டுபிடிப்புகள், 5 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டதை உறுதிபடுத்தி உள்ளது.
இந்தியாவின் ஆரம்பகால முன்னேற்றங்களை இது பிரதிபலிப்பதாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நமது தேசத்தின் எண்ணற்ற மைல்கற்களுடன், தமிழ்நாட்டின் பங்களிப்புகள், இந்தியாவின் புதுமை மற்றும் ஒற்றுமையை பிரதிபலிப்பதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு மாநிலம், சமூகம் மற்றும் குரலில் செழித்து வளரும் இந்தியாவின் உணர்வுகளை கொண்டாடுவோம் என பதிவிட்டுள்ளார்.