தமிழ்நாடு

யுபிஎஸ்சி தேர்வில் காப்பி அடித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

யுபிஎஸ்சி தேர்வில் காப்பி அடித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

webteam

யுபிஎஸ்சி தேர்வில் காப்பி அடித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான முதன்மை தேர்வுகள் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது, ஷபீர் கரிம் என்பவர் ப்ளுடூத் பயன்படுத்தி தேர்வில் விடைகளை கேட்டு எழுதியது தெரியவந்தது.

 ஹைதராபாத்தில் உள்ள தனது மனைவியிடம் கேள்விகளுக்கான விடைகளை கேட்டு ஷபீர் எழுதியது கண்டுப்பிடிக்கப்படது. ‌அவரிடம் இருந்து செல்போன், ப்ளுடூத் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. 

பிடிபட்ட ஷபீர் ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர். அவர் மீது சட்டப்பிரிவு 420-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டடு அக்டோபர் 30ல் கைதானார். தேர்வில் ஷபீருக்கு உதவிய அவரது மனைவி ஜாய்சி ஜோய், 18 மாத குழந்தையுடன்  கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சபீர் கரீமின் மனைவி, ராம்பாபு, சம்ஜத் உள்ளிட்ட 5 பேர் ஏற்கனவே வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் காப்பி அடித்த ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்படுள்ளது. எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.