தமிழ்நாடு

“பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செய்தியை பகிர வேண்டாம்” - ஐபிஎஸ் அதிகாரி

webteam

அயோத்தி தீர்ப்பு இன்று வெளியாகவுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் ஐபிஎஸ் சமூக வலைதள பயனார்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேதி அறிவிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். 

இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்தியா முழுவதும் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் நோக்கில் சமூக வலைத்தளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடப்பட்டால் நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளர் அரவிந்தன் சமூக வலைதள பயனார்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

“பொது அமைதிக்கு குந்தகம் வரும் வகையில் எந்த செய்தியையும் பகிர வேண்டாம்

உறுதி செய்யப்பட்ட செய்திகளை மட்டும் பகிரவும்

வாட் அப் அட்மின்கள், குழுவில் அட்மின்கள் மட்டும் பதிவிடும் வகையில் மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

இணைந்து பொது அமைதியை உறுதி செய்வோம்” என குறிப்பிட்டுள்ளார்