kodanan case pt desk
தமிழ்நாடு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு - மீண்டும் தீவிரமடையும் விசாரணை

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து ஆத்தூர் நகராட்சி பொறியாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

webteam

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொலை கொள்ளை சம்பவம் நடந்தது. காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்ட நிலையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்நிலையில், இதுதொடர்பாக ஆத்தூர் நகராட்சி பொறியாளரிடம் அதிகாரிகள் தற்போது விசாரணை மேற்கொண்டனர்.

kanagaraj

ஆத்தூரில் இருந்து சேலம் - சென்னை புறவழிச் சாலைக்குச் செல்லும் வழியில் எத்தனை வேகத்தடைகள் உள்ளன என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர். கோடநாடு கொள்ளை சம்பவம் நடந்த சில நாட்களில் ஆத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின முன்னாள் ஓட்டுனர் கனகராஜ், கார் மோதியதில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.