தமிழ்நாடு

கோடையை தணிக்க அழகான மண் பாட்டில்கள்

கோடையை தணிக்க அழகான மண் பாட்டில்கள்

webteam

சென்னை ஐஐடி மாணவர்கள் எளிதில் எடுத்துச்செல்லும் வகையில் வடிவமைத்து உருவாக்கியுள்ள நவீன குடிநீர் மண் பாட்டில்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

ஐஐடியில் வடிவமைப்புத்துறையில் முதுநிலைப்பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் மண்பானை செய்யும் குயவர்களின் வருமானத்தைப்பெருக்கும் விதமாகவும், பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்ப்பதற்கும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களைப் போன்று கைக்கு லாவகமாக இருக்கும் மண் பாட்டில்களை வடிவமைத்துள்ளனர். கோடை காலத்தில் குளிர்ந்த நீரை குடிப்பதற்கும் எளிதில் எடுத்தச்செல்வதற்கும் வசதியாக இந்த பாட்டில்கள் எடைக்குறைவாக உருவாக்கப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு அழகாகவும் இருப்பதால் பொதுமக்கள் இடையே அதிக கவனத்தை பெற்றுள்ளது. தற்போது 500 ரூபாயாக இருக்கும் இந்த பாட்டிலின் விலை விற்பனை அதிகரிக்கும் போது விலை குறையும் என வடிவமைத்துள்ள மாணவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுபோன்ற தொழில்நுட்பத்தின் மூலம் பாட்டில்கள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்தால் மண் குயவர்களின் வருவாய் அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை கிராம மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சென்னை ஐஐடி மாணவர்கள் சேர்ந்து உருவாக்கிய மண்பாட்டில் பொதுமக்கள் மத்தியில் பெரும்வரவேற்பை பெற்று வருகிறது