RN Ravi
RN Ravi PT wed, Twitter
தமிழ்நாடு

“பயத்தில் உளறிக் கொட்டுகிறார் ஆளுநர்” - திராவிட மாடல் குறித்த கருத்தும், திமுக தரப்பின் பதிலும்!

இரா.செந்தில் கரிகாலன், Kaleel Rahman

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

அப்படி ஆளுநர் என்னதான் சொன்னார்?

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டி இன்று வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு கூறி வரும் திராவிட மாடல் குறித்து அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதன்படி “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் வாசகம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் ஒரே நாடு, ஒரே பாரதம் என்ற கொள்கைக்கு எதிரானது” என தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் கருத்து குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் ட்வீட்

இந்நிலையில் ஆளுநரின் கருத்துக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் அவர், “ 'திராவிட மாடல் செத்துப் போன தத்துவம். மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது. பரிணாம கோட்பாடு மேற்கத்திய அடிமைத்தனம்' என்று சொல்லும் ஆளுநர் அவர்களே!

களைகளுக்கு கோடாலிகள் மீது கோபம் வருவது இயற்கை தான் என்பதை நாங்கள் அறிவோம். எனவே ஆளுநரின் கோபத்தை ரசிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஆளுநரின் இக்கருத்து பற்றி திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் புதிய தலைமுறை சார்பில் பேசினோம். அவர் நம்மிடையே பேசியவற்றின் விரிவான விவரம்:

அரசியல் சட்டத்தை மீறி பேசுகிறார் ஆளுநர்!

“இதுபோன்ற அரசியல் கருத்துகளை சொல்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. நான் அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படுகிறேன் என்று சொல்லும் ஆளுநர், பல இடங்களில் விதி 200-ஐ சுட்டிக்காட்டுகிறார். ஆனால், விதி 156, 57-லில் ஆளுநர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லும்போது.. ஆளுநர் அரசியல் சாராத மனிதராக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. அரசியல் சாராத ஆளுநர், அரசியல் சட்டத்தை மீறி அரசியல் பேசுகிறார்.

Governor

ஆளுநர் ரவியை குடியரசுத் தலைவர் திரும்பப் பெறவேண்டும்

ஆளுநர் ஒரு அரசியல்வாதி போல் செயல்படுகிறார். எனவே அவர் ஆளுநராக இருப்பதற்கான தகுதியை இழந்து விடுகிறார். ஆதனால் உடனடியாக குடியரசுத் தலைவர், ஆளுநர் ரவியை திரும்பப் பெறவேண்டும். தகுதியில்லாத மனிதர்களை உயர் பதவியில் வைப்பது ஜனநாயகத்துக்கு பேராபத்தானது. அதுவும் தமிழ்நாடு போன்ற உணர்வும் பகுத்தறிவும் மிக்க மாநிலங்களில் இதுபோன்ற சனாதனிகளை உயர் பதவியில் வைத்து அழகுபார்ப்பது இந்திய ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. இதனை புரிந்து கொண்டு குடியரசுத் தலைவர் ஆளுநரை திரும்பப் பெறவேண்டும்.

PTR

சனாதனத்தை தூக்கிப் பிடிப்பதால் திராவிடத்தை ஆளுநர் எதிர்க்கிறார்!

திராவிடம் என்ற கொள்கை காலாவதியாகி விட்டது என்று ஆளுநர் சொல்கிறார். எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறார் என்று பார்த்தால், அவருடைய சனாதனத்தை தூக்கிப் பிடிக்கிறார். திராவிடம் என்பது 300, 400 வருசமா பார்ப்பனியத்துக்கு எதிரானது. அல்லது பார்ப்பனியத்தைக் கற்றுக் கொடுக்கும் சனாதனத்துக்கு எதிரான கொள்கைதான் திராவிடம். பிறப்பொக்கும் எல்லா உயிரிக்கும். எல்லோரும் சமநீதி எல்லோருக்கும் சம உரிமை. பெண்ணடிமைத்தனம் இல்லாத ஒரு சமூகம். எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட மாடல்.

அவர்களின் குஜராத் மாடல் அகராதியிலேயே இல்லை!

குஜராத் மாடல் என்று சொன்னாங்க. குஜராத் மாடல் என்று இதற்கு முன்பு அகராதியில் எங்கு இருக்கு. அப்படி ஒன்றும் இல்லை. ஒரு கட்டமைப்பை அரசு ரீதியாக அவர்களின் கொள்கை ரீதியாக எடுத்துப் போகும்போது அதற்கு திராவிட மாடல் என்று பேர் வைக்கிறோம். இது காலாவதியாகி விட்டது என்று சொல்ல என்ன காரணம். தமிழக நிதியமைச்சர் தனிப்பட்ட முறையில் அரசியல் மேடையிலோ அல்லது இவரைப்போல பேட்டியிலோ சொல்லல. அவரு சட்டமன்றத்துல சொல்றாரு. சட்டமன்றத்துல சொன்னது ஏறத்தாழ இரண்டு மாசத்துக்கு முன்னாடி. அவரு மார்ச் மாசமே சொல்லிட்டாரு. ஆளுநர் இதுவரைக்கும் ஏன் வாய் திறக்காமல் இருந்தார். அப்ப இதன் பின்னணியில் ஏதோ இருக்கு.

CM Stalin

அமைச்சர் பிடிஆர்-ன் குற்றச்சாட்டுகளுக்கு ஆளுநர் ஏன் உடனே பதில் சொல்லவில்லை?

’என் மேல ஒரு அவதூறு பரப்புறாங்க’னு ஆளுநர் சொல்கிறார். அப்படி அவதூறை பரப்புவது மூன்றாம்தர அரசியல்வாதி இல்லை. ஒரு அமைச்சர், அதுமட்டுமல்ல சட்டமன்றத்தில் அவர் பேசும்போது ஆதாரமில்லாமல் எப்படி பேசியிருப்பாரு. அப்படி அமைச்சர் ஆராதமில்லாமல் பேசியிருப்பாரேயானால். ஆளுநர் உடனே எதிர்வினை ஆற்றியிருக்க வேண்டுமா இல்லையா? ஏன் பண்ணல. அப்ப நமக்கு சந்தேகம் வருது. என்ன சந்தேகம் வருதுன்னா, பிடிஆர் என்ன குறைகள் சொன்னாரோ அந்த குறைகளையெல்லாம் நிவர்த்தி செய்து அந்த குறைகளை மறைப்பதற்கான காலத்தை எடுத்துக் கொண்டு மறைத்துவிட்டு இப்போது நான் எதுவும் செய்யவில்லை என்று சொல்கிறாரோ என்ற சந்தேகம் வருது.

பயத்தில் உளறிக் கொட்டுகிறார் ஆளுநர்!

சில குற்றவாளிகள் தடயங்களை அழிப்பதற்கு நேரத்தை எடுத்துக் கொள்வார்கள். அதன் பிறகுதான் அவர்கள் வாதாடுவார்கள். அதைப்போல ஆளுநர் வாதிடுகிறாரோ என்ற ஐயப்பாடு வருது. நிதியமைச்சர் சொல்வது சட்டப்பூர்வமானது. இல்லையென்றால் அடுத்த நாளே மறுத்திருக்க வேண்டும். இது இன்னும் சந்தேகத்தைக் கிளப்புகிறது.

திராவிடம் என்பது தமிழ் மண்ணை மட்டுமல்ல அதையும் தாண்டி இந்தியா முழுவதும் பரவி வருகிறது. அதனால், சனாதனிகளுக்கு பயம் வருகிறது. ’குறைந்தபட்சம் வடக்கு பகுதியில் சில அடிமைகளை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தோம். இப்பொழுது அதற்கும் வழியில்லாமல் ஆக்கிவிடுவார்களோ’ என்கிற பயத்தில் உளறிக் கொட்டுகிறார்கள் என்றார்.