Family
Family pt desk
தமிழ்நாடு

மதநல்லிக்கண தீபாவளி: ஒற்றைமையோடு 20 ஆண்டுகளாக பண்டிகைகளை கொண்டாடி மகிழும் மாற்று மத நண்பர்கள்!

webteam

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக தீபாவளி பண்டிகை முன்னிட்டு புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியர் குமரேசன் என்பவர் வீட்டிற்கு வருகை தந்து அவர்களோடு ஒன்றாக இணைந்து தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட அப்துல் கபூர் என்ற இஸ்லாமிய குடும்பத்தினர் - 20 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் நட்பு.

diwali

புதுக்கோட்டை ஸ்ரீ நகரில் வசிக்கும் ஆசிரியர் குமரேசன் குடும்பத்தினர் இன்று தனது மகனின் தலை தீபாவளியை விமர்சையாக கொண்டாடினர். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வழக்கம்போல் ஐயப்பன் நகரைச் சேர்ந்த அப்துல் கபூர் - மலிகாஜான் தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் வந்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதையடுத்து அவர்கள், குமரேசன் குடும்பத்தினரோடு இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவும் உண்டனர். இன்றைய காலகட்டத்தில் மத நல்லிணக்கம் குறித்து சிலர் அவறாக பேசிவரும் சூழலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரித்துப் போகாத மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இரு குடும்பத்தினரும் தங்கள் மதங்களைக் கடந்து பண்டிகை கால கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருவது காண்போரை நெகிழ வைத்துள்ளது.

diwali

இது குறித்து அவர்கள் கூறுகையில்...

”20 ஆண்டுகளாக இந்த நடைமுறை தொடர்வதாகவும் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக்கு குமரேசனின் வீட்டிற்கு அப்துல் கபூர் குடும்பத்தினர் வருவதும் அதேபோல ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட பண்டிகைக்கு அப்துல் கபூர் வீட்டிற்கு குமரேசன் குடும்பத்தினர் செல்வதும் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்வதாக தெரிவித்தனர்.

இதுபோன்று மனதில் மதங்களைத் திறந்து மனிதநேயத்தை விதைத்தாலே எல்லா பண்டிகைகளும் எல்லோருக்கும் மகிழ்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.