ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சுவாரஸ்யமான மீம்கள் கலகலப்பூட்டி கொண்டிருக்கின்றன.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன் 20,298 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். மதுசூதனன் 9,672 வாக்குகளும், மருதுகணேஷ் 5,091 வாக்குகளும் பெற்றுள்ளனர். பல்வேறு தடைகளையும் தாண்டி தினகரன் முன்னிலை பெற்றுள்ளதை அவரது ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் 737 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் வெறும் 220 பெற்றுள்ளார். நோட்டாவுக்கு 333 வாக்குகள். பாஜகவை காட்டிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளன.
தினகரன் கிட்டத்தட்ட 8,000 வாக்குகள் அதிகம் பெற்று முன்னேறி வருவதைப் பற்றியும் பாஜக, நோட்டாவையே வெல்ல முடியாமல் தவித்து வருவதையும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்களாக போட்டு வைரலாக்கி வருகின்றனர். அதில் சில சுவாரஸ்மான மீம்களின் பட்டியல் இது: