தமிழ்நாடு

“நண்பனை மாற்றலாம் - அண்டை வீட்டுக்காரனை அல்ல” - வாஜ்பாய்

“நண்பனை மாற்றலாம் - அண்டை வீட்டுக்காரனை அல்ல” - வாஜ்பாய்

webteam

முதல் மாணவர் 

படிப்பதில் கில்லி ; அரசியல் அறிவியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார் ; உத்தரபிரதேசத்தில் பயின்றார்

அரசியல் 

ஒத்துழையாமை இயக்கத்தில் தொடங்கினார். 1939-ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இணைந்தார்

அப்பாவோடு படித்தவர்

வாஜ்பாய் மற்றும் அவரது தந்தை இருவரும் ஒரே கல்லூரியில் சட்டம் பயின்றவர்கள். வகுப்பு தோழர்கள். 

பத்திரிகை ஆர்வம்

பத்திரிகையாளனாக வர வேண்டும் என்பது அவரது விருப்பம். தீன் தயாள் உபாத்யாய் நடத்திய மாத பத்திரிகையில் வேலை செய்தேன் என அடிக்கடி கூறுவார்

முன்னோடி

ஷியாமா பிரசாத் மொகர்ஜியின் தீவிர பற்றாளர். அவரது பேச்சாக இருந்தார் என கூறுவார்கள். காஷ்மீருக்கு கடைசியாக மொகர்ஜி சென்றபோது உடன் இருந்தவர். அவரது உத்தரவை ஏற்று நாடெங்கும் பரப்புரை செய்தவர்

நேருவின் கணிப்பு

இந்த இளைஞன் ஒருநாள் இந்தியாவின் பிரதமராவான் என நேரும் சில வெளிநாட்டு விருந்தாளிகளிடம் சொன்னர். ஆனால் மூன்று முறை பிரதமானார். 

மிகச்சிறந்த நாடாளுமன்றவாதி

தனது முதல் உரையிலேயே நாடாளுமன்றத்தையே கலங்கடித்தவர். நேருவோடு நேருக்கு நேர் விவாதம் செய்தவர். அதிரடிப் பேச்சுகள் இவரது பலம். ஆனால் அர்த்தம் ஆயிரம் கொண்டிருக்கும்

அணு ஆயுதம் 

உலக நாடுகளின் கண்களில் மண்ணை தூவி , 1998-ல் அணுகுண்டு சோதனை செய்தவர். இந்தியாவை அணு ஆயுத நாடு என பகிரங்கமாக அறிவித்த துணிச்சல்காரர்

அண்டை நாடு உறவு

நண்பர்களை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம். ஆனால் அண்டை வீட்டுக் காரனை மாற்ற முடியாது எனபார். லாகூருக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி, அதில் முதல்முறையாக பயணம் செய்தவர்

அசைவப் பிரியர்

பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் இறால் உணவை ரசித்து சாப்பிடுவார். டெல்லியில் உள்ள கரீம் உணவகம் அவரது விருப்பமான உணவகம்