கனமழை புதியதலைமுறை
தமிழ்நாடு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்.. மீனவர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!

”மீனவர்கள் மன்னார் வளைகுடா குமரிக்கடல் தமிழக கடற்கரை பகுதிகள் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு செல்லவேண்டாம்” என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Jayashree A

நாளை அதிகனமழைக்கான ரெட் அலர்ட்: வானிலை அறிக்கை கூறுவதென்ன?

”மீனவர்கள் மன்னார் வளைகுடா குமரிக்கடல் தமிழக கடற்கரை பகுதிகள் மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு அடுத்து வரும் ஐந்து தினங்களுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழையைப்பொருத்த வரையில், தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் பதிவான மழையின் அளவு 327 மி.மீ இது கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையான காலகட்டத்தில் பெய்த மழையின் அளவாகும். இது இயல்பை ஒட்டி பதிவாகியுள்ளது.” என்கிறார் தமிழக வானிலை ஆய்வுமைய்ய இயக்குனர் பாலசந்தர். இதைபற்றி மேலும் தெரிந்துக்கொள்ள கீழிருக்கும் காணொளியைப்பார்க்கலாம்.