தமிழ்நாடு

உளவுத்துறை ஐஜி அதிரடி மாற்றம் - கள்ளக்குறிச்சி வன்முறை எதிரொலி?

Sinekadhara

உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் தற்போதைய ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உளவுத்துறை ஐஜியாக இருந்த ஆசியம்மாள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது உளவுத்துறை ஐஜியாக செந்தில்வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதேபோல் திருவல்லிக்கேணி காவல்துறாஇ துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பியாக மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் வன்முறை மற்றும் கலவரம் குறித்து முன்கூட்டியே உளவுத்துறை முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்பது போன்ற பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது உளவுத்துறை ஐஜி மாற்றம் முக்கியத்துவம் பெறுகிறது.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F346856834320449%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>