தமிழ்நாடு

“பாலிசிதாரர்களின் சேமிக்கும் எண்ணத்தை ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைக்கிறது” - எல்ஐசி ஊழியர் சங்கம்

webteam

ஆயுள் காப்பீட்டு பிரிமியங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதை திரும்ப பெற வேண்டும் எனவும், இது பாலிசிதாரர்களை சிரமப்படுத்தும் எனவும் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மதுரை தனியார் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆயுள் காப்பீட்டு பிரிமியங்கள் மீது 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பதை பாலிசிதாரர்கள் பெரும் சுமையாக கருதுகின்றனர். பாலிசிதாரர்களின் சேமிக்கும் எண்ணத்தை ஜிஎஸ்டி வரி விதிப்பு குறைப்பதாக உள்ளது. 

ஆயுள் காப்பீட்டு பிரிமியம் மட்டுமில்லாமல் அலுவலக சேவை, பாலிசி நகல் பெறுவது, உரிமை மாற்றம், பெயர் மாற்றம், தாமதமாக பணம் செலுத்துவதற்கும் ஜிஎஸ்டி விதிக்கப்படுவதால் ஏழை, எளிய மக்கள் மிகுந்த பாதிப்படைகின்றனர். மத்திய அரசு ஆயுள் காப்பீட்டு பிரிமியத்தில் விதிக்கப்படும் 18 சதவீத ஜுஎஸ்டியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இது குறித்து முதல்வர், எதிர்க்கட்சித்தலைவர், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோரிடம் முறையிடப்பட்டுள்ளது. ஆயுள் காப்பீட்டு பிரிமியத்தில் ஜிஎஸ்டியை குறைப்பதன் மூலம் பொதுமம்களிடம் காப்பீட்டு பரவலை எளிதாக அதிகரிக்க முடியும்” என்று தெரிவித்தார்.

FILE NAME- MDU LIC PC