தமிழ்நாடு

பெரியார் சிலை அவமதிப்பு.. யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சு. வெங்கடேசன்

kaleelrahman

மதுரை விமான நிலையத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புதிய தலைமுறைக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது...


விஷக்கிருமிகள் தான் பெரியார் சிலையை அவமதிப்பு செய்துள்ளனர். காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, தந்தை பெரியார் மிகப்பெரிய ஆளுமை.தொடர்ச்சியாக தந்தை பெரியாரின் சிலைகள் அவமதிக்கப்பட்டு வருகின்றது. இப்படி அவமதிப்பது எந்த விஷக்கிருமியாக இருந்தாலும் அவர்கள் மீது தகுந்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோல வேளாண் மசோதாவை திரும்பப்பெற வேண்டும்.

நாடாளுமன்றத்தில் விவாதிக்க குடியரசுத் தலைவர் அனுமதிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியது குறித்த கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் விவாதம் செய்துதான் இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக கூறுகின்றனர். ஆனால் இந்த சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். இது முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரானது. உணவுப் பொருளுக்கான விலைநிர்ணயம் அரசிடம் இருந்து கைநழுவிப் போகும் நிலையை உருவாக்குகிறது.

மேலும் மாநில உரிமையை பறிக்கக் கூடிய விஷயம். இந்த மசோதா முற்றிலும் விவசாயிகளுக்கும் மக்களுக்கும் எதிரான மசோதா. இது நாடாளுமன்ற வரம்புகளை மீறி ஏற்படுத்தப்பட்டுள்ளது என கூறுகின்றனர். எனவே இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும்" என்றார்.