தமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமிராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமணஞ்சேரியில் அரசு உயர்நிலைப்பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரவும் சமூக விரோத செயல்களில் இருந்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்கவும் உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளி வளாகங்களில் சிசிடிவி கேமிராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புவதாக தெரிவித்தனர்.
அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பான முந்தைய உத்தரவை நிறைவேற்ற இதுவரை என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது? என்பது குறித்தும் அரசுத் தரப்பில் அறிக்கையளிக்க வேண்டுமென நீதிபதிகள் உத்தரவிட்டனர்.