தமிழ்நாடு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் திடீர் சோதனை

பாளையங்கோட்டை மத்திய சிறையில் திடீர் சோதனை

Rasus

நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் சிறைத்துறை அதிகாரிகள் 2 மணி நேரம் சோதனை நடத்தினர்.

சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதி செய்து தரப்பட்டதாக புகார் எழுந்தது. இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பிற சிறைகளில் சோதனை நடத்தப்பட்டது. ஏற்கெனவே சேலம், கோவை மற்றும் கடலூர் சிறைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில், உதவி ஆணையர் விஜயகுமார் தலைமையில், 80 காவலர்கள் அதிரடியாக சோதனை நடத்தினர். கைதிகள் தங்கியிருக்கும் அறைகள், சமையல் அறை‌, குளியல் அறை ஆகியவற்றில் சோதனை நடந்தப்பட்டது. சிறை வளாகத்தில் செல்போன்கள், கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்றும் சோதனையிடப்பட்டது. காலை 6 மணி முதல் 8 மணி வரை சோதனை நடைபெற்றது. 

சோதனையின் போது சிறை அதிகாரிகள், வார்டன்கள் வெளியே செல்ல காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. இந்தச் சோதனையில் சில கைதிகளிடம் இருந்து பீடிக் கட்டுகள் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.