தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் : உறவினர்களிடம் நீதிபதி விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் : உறவினர்களிடம் நீதிபதி விசாரணை

PT

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்தது தொடர்பாக சாட்சிகளிடம் திருச்செந்தூர் விருந்தினர் மாளிகையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

சாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அரசியல் கட்சித் தலைவர்கள் திரைப்பிரபங்கள், கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டு மொத்த இந்தியாவே இந்தச் சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். முதல்வரும் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார்.

இந்நிலையில் தற்போது வழக்குத் தொடர்பான சாட்சிகளிடம் திருச்செந்தூர் விருந்தினர் மாளிகையில் விசாரணை நடைபெற்று வருகிறது.